இந்தியன் 2 தோல்வி… உச்சகட்ட அதிருப்தியில் ராம்சரண் ரசிகர்கள்!

vinoth
வியாழன், 18 ஜூலை 2024 (08:15 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

படத்தின் குறைகளில் மிக முக்கியமான ஒன்றாக சொல்லப்பட்டது படத்தின் நீளம்தான். இதனால் படத்தின் படத்தின் நீளத்தை 12 நிமிடங்கள் இப்போது படக்குழு குறைத்துள்ளது. ஆனாலும் படத்தின் மீதான கேலிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கி வரும் கேம்சேஞ்சர் படத்துக்கும் இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ராம் சரண் ரசிகர்கள் இந்தியன் 2 முடிவைப் பார்த்துவிட்டு இப்போது ஷங்கர் மீது கடுமையான விமர்சனங்களை வைக்க ஆரம்பித்து விட்டார்களாம். மேலும் சில ஆண்டுகளாக இழுத்தடித்து வரும் கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற சந்தேகத்தையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்