கடலுக்குள் புதைந்திருக்கும் ராமரின் ரகசியம்! – ராம் சேது தமிழ் ட்ரெய்லர்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:42 IST)
இந்தியில் அக்‌ஷய் குமார் நடித்து தயாராகியுள்ள ‘ராம் சேது’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தி இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள படம் ‘ராம் சேது’. இந்த படத்தில் சத்யதேவ், நாசர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலத்தை இடிக்க அரசு உத்தரவிட்ட நிலையில் அங்கு ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரத்தை ராமாயண இதிகாசத்தை கொண்டு கண்டுபிடிக்க ஆய்வாளர் குழு ஒன்று செல்கிறது. அந்த குழுவின் தலைவராக அக்‌ஷய் குமார் செல்கிறார்.


ஆனால் அவர்கள் ராமர் பாலம் குறித்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு கும்பல் தடுக்கிறது. இந்த கும்பல் யார்? இவர்களை சமாளித்து அக்‌ஷய்குமாரின் டீம் ராமர் பாலம் குறித்த ரகசியத்தை கண்டுபிடித்தார்களா என்பது கதை.

இந்த படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்திற்கு தமிழில் “ராமர் பாலம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் அக்டோபர் 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்