பட வாய்ப்பின்றித் தவிக்கும் ரகுல் ப்ரீத்சிங்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (16:49 IST)
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத்சிங், எந்தப் படவாய்ப்பும் இன்றி தவித்து வருகிறாராம். 
 
‘கில்லி’ என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்சிங். தமிழில் ‘தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவரைத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்காததால், தெலுங்கு பக்கம் தாவினார். தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார்.
 
ஆனால், சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமான ‘ஸ்பைடர்’, அவருக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துள்ளது. கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றி பெற்றாலும், இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் எந்தப் படவாய்ப்பும் இல்லாமல் தவித்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்