தீரன் அதிகாரம் ஒன்று - திரைவிமர்சனம்

வெள்ளி, 17 நவம்பர் 2017 (19:13 IST)
கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’



 


 


‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்துக்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

டி.எஸ்.பி.யான கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங்கை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அவர் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றும் ஏரியாவில், வீட்டில் இருப்பவர்களைக் கொன்றுவிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றனர். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார் கார்த்தி.
அந்த விசாரணை, வடஇந்தியா வரைக்கும் நீள்கிறது. தன் போலீஸ் படையுடன் அங்கு செல்லும் கார்த்தி, கொள்ளையர்களைப் பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்துள்ளார் வினோத். ‘சதுரங்க வேட்டை’ போலவே ஒவ்வொரு விஷயத்துக்கும் நுணுக்கமான விளக்கங்கள் தருகிறார். போலீஸ் அதிகாரியாக நச்செனப் பொருந்துகிறார் கார்த்தி. அலுவலகத்தில் விறைப்பும், வில்லன்களிடம் முறைப்பும் காட்டும் கார்த்தி, மனைவியிடம் கொஞ்சிக் குலாவும் இடங்கள் கவிதை. ரகுல் ப்ரீத்சிங் - கார்த்தி இடையிலான காதல் காட்சிகள் அத்தனை அழகு.

ஜிப்ரானின் இசை படத்தின் விறுவிறுப்புக்குப் பலம் சேர்த்திருக்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு வடநாட்டின் புழுதிப்படலத்தைக் கண்முன் நிறுத்துகிறது. காவலர்கள் ஒரு வழக்குக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்