உடற்பயிற்சியால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை… இன்னும் சரியாகவில்லை என புலம்பும் ரகுல் ப்ரீத் சிங்!

vinoth
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:42 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் சமீபத்தில் அவர் நடித்த இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படமாக அமையவில்லை. இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. இதனால் சமீபத்தில் காதலரை கரம்பிடித்தார் ரகுல்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் உடல்பயிற்சி செய்யும் போது அவருக்கு முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டுள்ளது. 80 கிலோ எடையைத் தூக்கியதால் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது அதற்காக சிகிச்சையும் ஓய்வும் எடுத்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்றும் அதற்கு இன்னும் இரண்டு வார காலம் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்