8 ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங்குக்காக கர்நாடகா செல்லும் ரஜினி… ஜெயிலர் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:41 IST)
ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் கடலூருக்கு அருகில் நடந்து வந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் பட ஷூட்டிங் கர்நாடகாவில் நடக்கவில்லை. லிங்கா படத்தின் ஷூட்டிங்தான் கர்நாடகாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்