விஷாலின் டீசர், டிரைலரை பின்னுக்கு தள்ளிய ரஜினி

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (22:21 IST)
ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலைவிழாவின் போது, விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டிரைலரும், அவர் நடித்த இன்னொரு படமான 'சண்டக்கோழி 2' படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஷால் ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இதே நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான அடுத்த நிமிடமே விஷாலின் டீசர், டிரைலர்கள் தகவல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு ரஜினியின் 2.0 டிரெண்டில் உள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான இந்த படத்தின் டீசரை உலகமே வரவேற்க தயாராகியுள்ளது.

மேலும் இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி குறித்த அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் விழா இது என்பதால் இந்த விழாவை தனது முதல் அரசியல் மேடையாகவும் ரஜினிகாந்த் பயன்படுத்தி கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்