ரனகளமான மும்பை, புனே; 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த போர் ஏற்படுத்திய கலவரம்

புதன், 3 ஜனவரி 2018 (16:57 IST)
வருடா வருடம் கொண்டாடப்படும் போர் நினைவு தினம் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல் மும்பை மற்றும் புனே மாநிலத்தில் பெரிய கலவரமாக வெடித்தது.

 
200 வருடங்களுக்கு முன்பு இரண்டு ஜாதி பிரிவினருக்கு இடையில் நடந்த போர் ஒன்றில் தலித் பிரிவினர் வெற்றி பெற்றனர். இந்த போர் நினைவு தினம் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. இது பீமா கோரேகான் போர் நினைவு தினம் என்று அழைக்கப்படுகிறது. 
 
இந்த வருடம் 200வது நினைவு வருடம் என்பதால் மிகப் பெரிய அளவில் மக்கள் திரளாக கூடினார்கள். இந்த நினைவு தின விழாவில் புகுந்த இந்துத்துவா அமைப்பினர் அங்கு இருந்த தலித் மக்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மரணமடைந்தார்.
 
இதையடுத்து இந்த உயிரிழப்பு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. புனேவில் தலித் மற்றும் இந்துத்துவ பிரிவினர் இடையே பெரிய கலவரமாக மாறியது. காவல்துறையினர் செய்வது அறியாது திகைத்தனர். 
 
புனேவை தொடர்ந்து மும்பையில் இந்த பிரச்சனை உருவெடுத்தது. இரு நகரங்களும் கலவர பூமியாக மாறியது. கடைகள் மூடப்பட்டது. வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது. கலவரத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 
 
மேலும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் போலீஸார் சாலைகள் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். 1ஆம் தேதி தொடங்கிய கலவரம் நேற்று மாலை வரை நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்