ரஜினிகாந்த் உடல்நலப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்றுள்ள ரஜினி, இந்தியா திரும்பியதும் தனது அடுத்த படத்துக்கான முடிவை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பியதும் முதலில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில்தான் ஈடுபட உள்ளாராம். அதன் பின்னர் ஒரே ஒரு நாள் அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம்.