இரண்டாவது நாளில் கடுமையாக வீழ்ந்த வேட்டையன் வசூல்!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (07:44 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன் தினம் வேட்டையன் திரைப்படம் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். ஒரு தரப்பினர் ரஜினி படம் போலவே இல்லை என்று அங்கலாய்க்க, மற்றொரு தரப்பினர் ரஜினியை இயக்குனர் வித்தியாசமாகக் காட்டியுள்ளார் என்று பாராட்டினார்.

ஆனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்துக்குக் கிடைத்த முதல் நாள் வரவேற்பு வேட்டையன் படத்துக்குக் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 17 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகளவில் 60 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று விடுமுறை நாளாக இருந்த போதும் பெரியளவில் ரசிகர்கள் வேட்டையன் படத்துக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. நிறைய திரையரங்குகளில் இருக்கைகள் நிரம்பாமல் இருந்துள்ளன. இதனால் முதல் நாளை விட இரண்டாம் நாளில் வசூல் குறைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் வேட்டையன் பிக்கப் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்