சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (07:34 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் “இந்த படத்தில் அமிதாப் பச்சன் சார் நடித்துள்ள கதாபாத்திரம் பவர்ஃபுல்லானது. சிவாஜி சார் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.” எனப் பேசியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன் என்கவுண்ட்டர் கொலைகளுக்கு எதிரான மனித உரிமை போராளியாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்