பறவை மீது டான்ஸ் ஆடும் ரஜினி

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (15:08 IST)
‘2.0’ படத்துக்காக மிகப்பெரிய பறவை மீது ரஜினி டான்ஸ் ஆடுவது போல காட்சிப்படுத்தியுள்ளனர். 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக அக்‌ஷய் குமார்  நடித்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம்  தயாரித்துள்ளது.
 
இந்தப் படத்திற்காக, ரஜினியும், எமி ஜாக்சனும் மிகப்பெரிய பறவை மீது டான்ஸ் ஆடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக, ஏகப்பட்ட கிராபிக்ஸ் கலைஞர்கள் உழைத்திருக்கின்றனர். தன்னுடைய பாடல்களில் பிரமாண்டத்தை எதிர்பார்க்கும் ஷங்கர், இதிலும் அப்படியே செய்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்