காதல் முறிவு; திருமணம் மீது வெறுப்பு - புலம்பும் சிம்பு ஹீரோயின்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (13:42 IST)
நான் காதலித்த நபரால் திருமணம் மீதே வெறுப்பாக உள்ளது என்றும் காதல் திருமணம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்றும் பிரபல நடிகை சார்மி கூறியுள்ளார்.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை சார்மி. சிம்பு நடித்த காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் தமிழ்ல் அறிமுகமானவர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது தொடர்ந்து தெலுங்கு சினிமாவி நடித்து வருகிறார்.
 
அவர் நடித்த ஜோதி லக்‌ஷ்மி படம் மூலம் தயாரிப்பாளரானார். இதையடுத்து கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான படங்கள் அவரும் இணைந்து தயாரித்துள்ளார். 
 
வயதான நடிகைகளிடம் திருமணம் குறித்த கேள்விகளும், திருமணமான நடிகைகளிடம் வாரிசு குறித்த கேள்விகளும் தொடர்ந்து இந்த ஊடகங்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை சார்மி தனது திருமணம் குறித்து கூறியதாவது:-
 
நான் ஒருவரை காதலித்தேன். நாங்கள் இருவரும் 2 காரணங்களால் பிரிந்துவிட்டோம். திருமணம் செய்து இருந்தாலும் அதே 2 காரணங்களால் பிரிந்து இருப்போம். 
 
நான் காதலித்த நபரால் திருமணம் மீதே வெறுப்பாக உள்ளது. காதல் திருமணம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஒருவரை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்து அவருக்காக வாழ முடியாது. அதனால் நான் திருமணம் செய்யக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்