ரஜினிக்கு வழிவிட்ட கமல்ஹாசன்

புதன், 28 மார்ச் 2018 (14:22 IST)
ரஜினியின் ‘காலா’ படத்துக்குப் பிறகே கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸாக இருக்கிறது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இந்தப் படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. அவருடன் சேர்ந்து பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சென்சார் சான்றிதழ் கூட வாங்கியாகிவிட்டது. ஆனாலும், ‘காலா’ ரிலீஸுக்குப் பிறகே  தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்