தேசிங் பெரியசாமியை டிக் அடித்த ரஜினி… தயாரிப்பு நிறுவனமும் இதுதான்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (09:56 IST)
ரஜினி நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தை தேசிங் பெரியசாமி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.

இப்போது அண்ணாத்த படத்தை முடிந்த நிலையில் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அந்த படத்தை இயக்க தேசிங் பெரியசாமி ஒப்பந்தம் ஆக, தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்