விஜய்யை அடுத்து ரஜினிக்கு ஸ்கெட்ச் போடும் தில்ராஜு!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (07:23 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ளது.

இதையடுத்து ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் ஒரு கௌரவ வேடத்திலும், ஞானவேல் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார். இதற்குப் பிறகு அவர் தெலுங்கில் வால்டர் வீரய்யா படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பாபி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியதே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுதானாம். எப்படி வம்சியை அழைத்து வந்து விஜய்க்கு கதை சொல்ல வைத்தாரோ, அது போல பாபியை அழைத்து வந்து ரஜினிக்கு கதை சொல்ல வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்