ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (11:48 IST)
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில்  உருவாகிவரும்  படம் "பேட்ட" இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.  இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க மலையாள  நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசிலை படக்குழுவினர் அணுகியிருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வரதன் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆதலால் தன்னால் இப்படத்தில் முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 
 
பகத் பாசில் ஏற்கெனவே சில காரணங்களால் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்