இந்நிலையில், கரூர் மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்றம் சார்பில், கரூர் மாரியம்மன் கோயிலில் தங்கத்தேரோட்டம் நடத்தினர். ரஜினி காந்த் ரசிகர்கள் ராஜா, கீதம் ரவி ஆகியோர் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு விரைவில் வரவேண்டியும், தமிழக முதல்வராக வேண்டியும், கரூர் மாரியம்மன் கோயிலில் தங்கத்தேரோட்டம் நடத்தினர்.