மீண்டும் ஆன்மீக பயணம் செல்லும் ரஜினி - அப்போ அரசியல் என்னாச்சு?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (13:57 IST)
காலா படத்தின் படபிடிப்பு முடிந்த பின், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இமயலைக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
இமயமலைக்கு ரஜினிகாந்த் அடிக்கடி ஆன்மீக பயணம் செய்வார். அங்குள்ள பாபா குகைகளில் அவர் தியானம் செய்வது வழக்கம். ஆனால், கபாலி, 2.0, காலா என தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அவர் இமயமலைக்கு செல்லவில்லை.
 
அதோடு, படப்பிடிப்புகளுக்கு நடுவே அவர் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது, போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என தெரிவித்து அவரின் ரசிகர்களை குஷிபடுத்தினார். அதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், காலா படத்தில் அவருக்கான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக தெரிகிறது. 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் துபாயில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு விட்டு, அவர் அடுத்த மாதம் இமயமலைக்கு செல்வார் எனத் தெரிகிறது. 
 
காலா படத்திற்கு பின் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த அவரின் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், டிசம்பர் மாதம் தனது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்