ஜெ.வின் ஆன்மா அவர்களை மன்னிக்காது - சாபம் விட்ட சசிகலா?

புதன், 11 அக்டோபர் 2017 (18:22 IST)
ஐந்து நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா நாளை சிறைக்கு திரும்புகிறார்.


 

 
தனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார் சசிகலா. அவரின் பரோல் இன்றோடு முடிவடைகிறது.
 
யாரையும் சந்தித்து பேசக்கூடாது, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சசிகலாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் உட்பட தொலைப்பேசியில் சிலரிடம் சசிகலா பேச விரும்பியதாகவும், ஆனால், அவரிடம் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்து வருகிறார் என நேற்று செய்திகள் வெளியானது. அதேபோல், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உட்பட மொத்தம் 8 அமைச்சர்களிடம் சசிகலாவிடம் தொலைப்பேசியில் பேசியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த பரோல் நாட்களில் அவர் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையிலேயே அதிக நேரத்தை கழித்தார் எனவும், முதல் 3 நாட்கள் அவர் உறவினர்களிடம் கூட அதிகம் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், நேற்று மட்டும் தினகரன் மற்றும் திவாகரன் மகன் ஜெயானந்த் உட்பட பலரிடம் அவர் மனம் விட்டு அதிக நேரம் பேசியதாக கூறப்படுகிறது. 


 

 
அப்போது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் பற்றி பேச்சு வந்த போது “ அவர்களை அக்காவின் (ஜெயலலிதா) ஆன்மா என்றைக்கும் மன்னிக்காது என கோபமாக சசிகலா கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அதிகாரம் உள்ளதால் ஆட்டம் போடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது எனவும் அவர் கருத்து தெரிவித்தாராம்.
 
மற்ற நேரங்களில் ஜெ.வுடன் தான் இருந்த பழைய புகைப்படங்களை பார்த்தவாறும், ஜெ. நடித்த திரைப்படங்களையும் அவர் பார்த்து ரசித்த படி இருந்துள்ளர். அப்போது அவர் கண்ணில் கண்ணீர் வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது அசைவ உணவுகளை உண்ணுவதை தவிர்த்து விட்டதால், அவருக்கென பிரத்யோக கார்டன் சமையல்காரரை வரவழைத்து சைவ உணவுகளை ஏற்பாடு செய்தார் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா. ஆனால், அதில் பெரிய ஆர்வத்தை சசிகலா காட்டததில் குடும்ப உறுப்பினர்களுக்கு வருத்தம் எனக் கூறப்படுகிறது.
 
அவரின் பரோல் இன்றோடு முடிவடைகிறது. அவர் நாளை மாலை 6 மணிக்குள் பெங்களூர் சிறைக்கு திரும்ப வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தினகரன் மற்றும் ஜெயானந்த் ஆகியோர் செய்து வருகின்றனர். 
 
வீடு மற்றும் மருத்துவமனை தவிர எங்கும் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், ஜெ.வின் சமாதிக்கு செல்ல முடியாத வேதனையில் அவர் சிறைக்கு திரும்ப இருக்கிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்