ஷங்கர்தான் OG இயக்குனர்.. கேம்சேஞ்சர் நிகழ்வில் பாராட்டித் தள்ளிய ராஜமௌலி!

vinoth
வெள்ளி, 3 ஜனவரி 2025 (08:02 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .

அப்போது பேசிய ராஜமௌலி “இதை ஷங்கர் சாரின் முதல் தெலுங்குப் படமாக நான் பார்க்கவில்லை. ஏனென்றால் எங்களுக்கு அவர் தெலுங்குப் பட இயக்குனர். இப்போதைய இளம் இயக்குனர்கள் எங்களை வியந்து பார்க்கலாம். ஆனால் நாங்கள் எல்லாம் வியந்து பார்த்த இயக்குனர் என்றால் அது ஷங்கர் சார்தான். கமர்ஷியல் சினிமா என்று வந்துவிட்டால் அவர்தான் ஒரிஜினல் கேங்ஸ்டர் இயக்குனர்.” எனப் பாராட்டி பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்