காதலரோடு வெளிநாட்டில் ரொமாண்டிக் போஸ் கொடுத்த ரைசா!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (08:04 IST)
நடிகை ரைசா வில்சன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தால் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகலாம் என நம்பி சென்றவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதில் ஒரே ஒரு விதிவிலக்கு என்றால் அது ரைசா வில்சன்தான். பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் அவரை யாருக்குமே தெரியாது. ஆனால் வெளியே வந்த பின்னர் அவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உருவாகியுள்ளார்.

வரிசையாக படங்களில் நடித்து வரும் அவர் அவ்வபோது சமூகவலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு ஒன்றில் இப்போது அவர் தனது காதலரைக் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்