சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:49 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை ஒருவர் இணைந்து உள்ள தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
 சுந்தர் சி தற்போது ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்கள் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் இணைந்துள்ளார். இவர் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
சுந்தர் சி யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் ஏற்கனவே நடித்து வரும் நிலையில் தற்போது நான்காவதாக ஒருவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்