’புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற இளம் பெண் நெரிசலில் சிக்கி பலி.. குழந்தை மயக்கம்..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (07:33 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஹைதராபாத்தில் பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும், ஒரு குழந்தை மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்ட போது பெரும் கூட்டம் காரணமாக நெரிசல் ஏற்பட்டது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு குழந்தை மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியானது. மயக்கம் அடைந்த குழந்தையை காப்பாற்ற போலீசார் மற்றும் அங்கிருந்த ரசிகர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பியதாக தெரிகிறது.

’புஷ்பா 2’ வெளியான தியேட்டர் வாசலில் ஏராளமான மக்கள் குவிந்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாகவே இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு முதலே தியேட்டர் முன் கூட்டம் அதிகரித்ததாகவும், இப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்