முன்பதிவிலேயே 100 கோடி ரூபாய் வசூல்… உச்சம் தொட்ட புஷ்பா 2!

vinoth

புதன், 4 டிசம்பர் 2024 (07:48 IST)
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்துக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் நடந்து வருகிறது. தற்போது படத்தின் முன் பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் முன்பதிவு மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது புஷ்பா 2. இதுவரை எந்தவொரு இந்திய படத்துக்கும் நடக்காத சம்பவம் இது. இதன் மூலம் ரிலீஸுக்குப் பின் மிகப்பெரிய அளவில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AGS Entertainment (@agsentertainment)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்