பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - ராதிகா சரத்குமார் பகீர் தகவல்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (08:51 IST)
தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.


 

 
ஹாலிவுட் முதல்  பாலிவுட் வரை நடிகைகள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகளை பற்றி தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகைகள் சிலர் கூட தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக பேசினார்கள்.
 
இதற்காக சமூக வலைத்தளமான டிவிட்டரில் மீ டூ (Me too) என்கிற ஹேஸ்டேக்கை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மீ டூ (Me too) என பதிவிட்டுள்ளார். இதன் மூலம், திரைத்துறையில் தானும் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இதுகண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்