நிரோத் யூஸ் பண்ண சொன்னா கேக்குறீங்களா? – பார்த்திபன் ட்வீட்டிய கலங்க செய்யும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:28 IST)
பிறந்து சில மணி நேரம் கூட ஆகாத குழந்தையை மூட்டைக்கட்டி தூக்கி வீசியது குறித்து இயக்குனர் பார்த்திபன் ஆதங்கமான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரைப்படம், திரைத்துறை சார்ந்தது மட்டுமல்லாமல் பொது சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் தனது கருத்துகளை ட்விட்டரின் மூலம் தெரிவித்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். தற்போது அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ பார்ப்போட் உள்ளத்தை கலங்க செய்வதாக உள்ளது. அந்த வீடியோவில் ரோட்டில் கிடக்கும் துணியால் ஆன மூட்டை ஒன்றை பிரிக்கிறார்கள். அதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் கிடப்பது பார்ப்போர் உள்ளத்தை பதற செய்கிறது.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பார்த்திபன் “நிரோத் உபயோகியுங்கள், நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்-ன்னு ரேடியோவுல டீவியில விளம்பரப் படுத்துறாங்களே எதுக்கு?பலூன் ஊதிப் பறக்க விட்றதுக்கா?இந்த மாதிரி அனாதைகள் உருவாகாம இருக்கத்தான்!1989-புதிய பாதை வசனம்-பழசாகாம இன்னமும் பச்சக் குழந்தையாட்டம் ரத்தமும் சதையுமா கிடக்கு” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்