ஆனால் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளோடு மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையாலும், மக்கள் அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் வரிசையாக படங்களை ஓடிடி தளங்களில் ரிலிஸ் செய்து வருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ‘ஓடிடி என்பது மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசுக்கு கூட கட்டுப்பட்டது அல்ல. திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். இதுபற்றி திரைத்துறையினருடன் பேசி சரியான முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.