நீங்க கொடுக்குற காசுல நாங்க சொகுசா இருக்கோம்… ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ஆர் ஜே பாலாஜி!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:51 IST)
ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர் ஜே பாலாஜி சினிமா வசூல் பற்றி ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்ள தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் “சமீபத்தில் ஒரு இளைஞனின் உயிர்போனது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். திரையரங்குக்கு சென்று படம் பாருங்கள். படத்தைப் பற்றிய விமர்சனத்தை சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நீங்க கஷ்டப்பட்டு உழச்சு சம்பாதிச்சு கொண்டுவந்து கொடுக்குற காசுல நாங்க சொகுசா இருக்கோம்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்