ஆர் ஜே பாலாஜி, கருணாஸ் & யோகி பாபு இணையும் படத்தின் வித்தியாச்மான தலைப்பு!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (18:38 IST)
வானொலியில் ஆர் ஜே வாக இருந்த ஆர் ஜே பாலாஜி தன் திறமையால் சினிமாவுக்குள் நுழைந்து இப்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். அவர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன், எல் கே ஜி மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் நல்ல கவனத்தை ஈர்த்தன. அதன் பின்னர் அவர் நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், பெரியளவில் வசூல் செய்யவில்லை. இதையடுத்து இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

இதையடுத்து அவரின் சிங்கப்பூர் சலூன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் பின்னர் வரிசையாக படங்கள் நடித்து வரும் நிலையில் இப்போது சொர்க்கவாசல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு யோகி பாபு மற்றும் கருணாஸ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்