ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள் கூறிய 'துணிவு' பட தயாரிப்பாளர்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (16:36 IST)
இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளையொட்டி துணிவு படத் தயாரிப்பாளர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சில ஆண்டுகளுக்கு முன் அவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனார் படத்தில் அவர் சிறந்த இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இந்தியாவில் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியா சினிமாவைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் இசையமைத்து வருகிறார்.

இன்று தன் 56 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சினிமா கலைஞர்கள், அரசியல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ALSO READ: துணிவு படத்திற்கு சென்சர் சான்றிதழ்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
இந்த நிலையில்,அஜித்  நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத் தயாரிப்பாளர் போனி கபூர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  மியூசிக் மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்து, கடந்த நவம்பரில் ஜான்வி கபூர் நடிப்பில்,மதுக்குட்டி இயக்கத்தில் வெளியான மில் படத்தில், அவர் இசையமைத்த Tum Bhi Raahi என்ற பாடலையும் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்