பிரபாஸின்'' சலார் '' பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:35 IST)
கே.ஜி.எப்.1-2 படங்களின் இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரமாண்டமான இயக்கி வரும் படம் சலார்.  கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து   நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிரபாஸுடன் இணைந்து இப்படத்தில் பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன்,ஜகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஹாம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார்.  உஜ்வல் குல்கர்னி எடிட் செய்கிறார்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,   செப்டம்பர் மாதம் 28  ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வரும் படக்குழுவினர் அனைவருக்கும் பிரபாஸ்.  தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து தலா 10000 ரூபாயை அன்பளிப்பாக வழங்கியதாகக் கூறப்பட்டது.

இந்த  நிலையில்,  வரும் ஜூலை  முதல் வாரத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹம்பேல் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் வரும் ஜூலை 6 ஆம் தேதி  அதிகாலை 5:12 மணிக்கு சலார் படத்தின் டீசர் வெளியாகும் எந்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்