பிரபாஸின் புதிய பட கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ.200 கோடி?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (14:26 IST)
பிரபாஸின் ‘கல்கி ஏடி 2898’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ.200 கோடி செலவிட இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில்  உருவாகவுள்ள படம்  பிராஜக்ட் கே. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் ‘கல்கி ஏடி 2898 ‘ என்று படக்குழு அறிவித்தது.

இந்த படத்தில்  நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இவர்களுடன் இணைந்து,  தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் துல்கர் சல்மான், பசுபதி, திஷா பதானி  உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர், வைஜெயந்தி மூவிஸ்   நிறுவனம் ரூ.600 கோடி செலவில் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

கல்கி ஏடி 2898 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஏற்கனவே பிரபாஸின் ஆதிபுரூஸ் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் விமர்சனம் செய்யப்பட்ட  நிலையில்,  இப்படத்திற்கு ரூ.200 கோடி கிராபிக்ஸ் பணிகளுக்கு பணிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்