தீபிகா படுகோன் அழகானவர்...மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்'' -பிரபாஸ் புகழாரம்

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (20:46 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் நடிப்பில்  ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள ‘கல்கி 2898AD’ என்ற படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர்களுடன் இணைந்து, அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில், அமெரிக்காவில்  ’புரொஜக்ட் கே’ என்ற படத்தின்  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.

30 ஆம் நூற்றாண்டு படமாக உருவாக  உள்ள இப்படம்  கல்கி அவதார நிகழ்ச்சியின் கதை அம்சம் கொண்டதாக கூறப்படுகிறது. நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில்  நடிபர் பிரபாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்  தீபிகா சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தீபிகா படுகோன் மிகவும் அழகான பெண் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுபவர்.  அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.

மேலும், ஷூட்டிங்கின்போது எப்போதும் துடிப்பாக இருப்பார். அவரை எனக்குப் பிடிக்கும்.  அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். கல்வி மூலம் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்