பாகுபலிக்கு பின் மீண்டும் இணையும் பிரபாஸ்-அனுஷ்கா!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:59 IST)
பிரபாஸ் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா மீண்டும் ஒரு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகப் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது
 
இந்த நிலையில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குனர் மாருதி என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்