’’மாஸ்டர் ’’படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டிய பவர் ஸ்டார் !! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (18:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கில் வெளியான படம் மாஸ்டர். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதேசமயம் இப்படம் வெளியாகி 25 ஆம் நாளின்போது  உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல் குவிந்துள்ளதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், மாஸ்டர் பட தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் வெளியாகி 25 ஆம் நாளை முன்னிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் ஒரு டூவீட் பதிவிட்டார்.

அதேபோல் இப்படத்தின் இசையமைப்பாளர் இப்படத்தின் 25 ஆம் நாளை முன்னிட்டு  மாஸ்டர் பட ஒரிஜினல் பிஜிஎம் இசையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மாஸ்டர் படத்தின் ஹீரோ  ஜேடி கதாப்பாத்திரத்தில் நடித்த  விஜய் மற்றும் வில்லன் பவானி விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடித்த இருவரின் நடிப்பையும் பலரும் பாராட்டி விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் சிரஞ்சீவி, விஜய் சேதுபதியின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :

எந்தவொரு படத்திலும் தான் ஏற்கின்ற கதாப்பாத்திரத்தை உணர்த்திவிடும் வல்லமை பெற்றவர் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளர். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்