மாஸ்டர் 25-வது நாள்...ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்....வைரலாகும் புகைப்படங்கள்..

சனி, 6 பிப்ரவரி 2021 (18:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கில் வெளியான படம் மாஸ்டர். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதேசமயம் இப்படம்  வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது. இதுவரை சுமார் ரூ.250 கோடி வசூல் குவிந்துள்ளதாக தகவல் வெளியானது.

 மாஸ்டர் பட தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் வெளியாகி 25 ஆம் நாளை முன்னிட்டு டுவீட் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் மாஸ்டர் பட ஒரிஜினல் பிஜிஎம் இசையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் #MasterOST என்று ஹேஸ்டேக் உருவாக்கி வருகின்றனர்.
 
இன்று பனையூரில் உள்ள தனது வீட்டின் முன் விஜய் ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்கள் உற்சாகமாக அவரைப் பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்