தளபதி 65 படத்தில் இணைந்த இந்திய அளவில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:01 IST)
தளபதி 65 படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஒப்பந்தமாகியுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக தளபதி 65 இருக்கிறது. இந்த படத்துக்கான கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில சேஸிங் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் நெல்சன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவில் மோஸ்ட் வாண்டட் ஸ்டண்ட் மாஸ்டர்களாக மாறியிருக்கும் அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர்களை ஒப்பந்தம் செய்ய சொல்லி விஜய்யே தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்