விஜய்யின் ‘தளபதி 65’ படத்தின் நாயகி இவர் தான்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (17:16 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல சற்றுமுன் இந்த அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்ற அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
முதன்முதலாக விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஜோடி சேர உள்ளனர் என்பதும் இந்த ஜோடி எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை திரையில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே தெலுங்கில் பூஜா ஹெக்டே நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும் தமிழில் முகமூடி உள்பட ஒருசில படங்களில் மட்டுமே நடித்து உள்ளார். ஆனால் தளபதி 65 திரைப்படம் வெளியான பிறகு அவர் மாளவிகா மோகனன் போல் மிகப் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்