’பொன்னியின் செல்வன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ??

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (17:27 IST)
இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படம் வரும் தீபாவளிக்கு ரீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான முறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்புக்குப் பஞ்சமில்லாத வகையில் மணிரத்னம் இப்படத்தை உலகத் தரத்தில் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், நீளமான தலைமுடியுடன் கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படபிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.

இப்படத்திற்கான அனைவரது கெட்டப்புகள் மற்றும் தோற்றம் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்கள் மற்றும் இளவரசிகள் போன்றும்,  அனைவரது நடிப்பும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மணிரத்னம் நீண்டநாட்கள் இப்படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அநேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடியவுள்ளதாகத் தெரிகிறது.

இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனால் மணிரத்னம் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் இந்தப் படத்தைக்  காண ஆர்வமுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்