பேட்ட முன்பதிவு தொடங்கியது! காளியின் ஆட்டம் ஆரம்பம்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (10:45 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன் ,திரிஷா , விஜய்சேதுபதி , சசிகுமார் , பாபிசிம்ஹா மற்றும் நவாசுதின் சித்திக் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பேட்ட. 



இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமுழுவதும் பேட்ட படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே வெளியான பாடல்கள்,  டீசர் உள்ளிட்டவை படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று முதல் தியேட்டர்களில் பேட்ட படத்துக்கான முன்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் ஆக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் முன் பதிவு செய்து வருகிறார்கள். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்