இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் 'பேட்ட', விஸ்வாசம் படங்களுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய இரு திரைப்படங்களும் அரசு விடுமுறையில்லாத, நாட்களில் 6 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், இது போன்ற தினங்களில் 4 காட்சிகள் திரையிட வேண்டும் என்ற அரசாணை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதையும் மீறி 6 காட்சிகள் திரையிட இருப்பது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் 6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகளின், அங்கீகாரத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே முன்பதிவு மூலம் 6 காட்சிகளுக்கு வசூல் செய்த கட்டணங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.