மரணமாஸ்' ரஜினிக்கு பதில் கூறிய 'அடிச்சு தூக்கு' அஜித்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (19:46 IST)
கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்களுக்கு தொடர் விருந்துகள் கிடைத்து வருகிறது. விஜய்யின் அடுத்த பட அப்டேட், ரஜினியின் '2.0 ரிலீஸ், 'பேட்ட' படத்தின் புரமோஷன் மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' அப்டேட்டுக்கள் என சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த 'பேட்ட' படத்தின் மரணமாஸ் பாடலில் ஒரு வரி வரும். 'டஃபு தரணும் அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்' என்ற பாடல் வரிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று வெளிவந்துள்ள அஜித்தின் 'விஸ்வாசம்' பாடலில் 'வந்தாண்டா மதுரைக்காரன்' என்பது பதிலாய் உள்ளது.

மேலும்  'செம சீனா சிதற வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பதாண்டா நீ என் ஆளு,

என்ற வரிகள் 'பேட்ட' ரசிகர்களை வரும் பொங்கல் தினத்தில் சிதற வைக்கணும், அப்ப தாண்ட நீ அஜித் ரசிகன்' என்பதை சொல்லாமல் சொல்வதாக அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருவதால் சமூக வலைத்தளங்கள் பெரும் பரபரப்பில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்