பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் செய்த செயலால் கலகலப்பு

திங்கள், 10 டிசம்பர் 2018 (17:36 IST)
நேற்று நடந்த பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சிம்ரன், ராரா சரசுக்கு ராரா என சந்திரமுகி பாடலுக்கு நடனம் ஆடினார். அதனை ரஜினி காந்த் மேடையில் சிரித்தபடி ரசித்தார்.


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. இதில் பேட்ட படத்தில் நடித்துள்ள ரஜினி, விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன்,  பாபி சிம்ஹாா, சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.  இந்த விழாவில், கலாநிதி மாறன் ,  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 
 
 
இந்த விழாவில் பேசிய சிம்ரன் 15 வருடங்கள் முன்பு தவறவிட்ட வாய்ப்பு, பிறந்த நாள் பரிசாக  கிடைத்தது. இந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்லை என்றார்.
 
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டு இருந்த சிம்ரன் திடீரென, சந்திரமுகி படத்தில் வரும் ராரா சரசுக்கு ராரா பாடலுக்கு நடனம் ஆடினார். இதனை ரஜினி மெய்மறந்து ரசித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்