டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இந்த படம் உலகம் முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது.
முதல் நாளில் உலகம் முழுவதும் சலார் திரைப்படம் 175 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சலார் படபிடிப்பு பற்றி பிரசாந்த் நீல் புதிய தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், சலார் ஷூட்டிங்கினால் என் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும், போதிய நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்களை சந்திக்க வீட்டிற்குச் செல்வேன். நான் ஒரு சரியான தந்தையாக, கணவனாக இல்லை என்று கூறிய அவர், சலார் பட பணிகள் தொடர்பாக தன் தனிப்பட்ட வாழ்க்கை பாதித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.