பாலிவுட் முன்னணி ஹீரோவை இயக்கும் பத்து தல புகழ் கிருஷ்ணா!

vinoth
திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:31 IST)
பல இழுபறிகள், தாமதத்துக்குப் பிறகு சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை முதலில் கன்னட இயக்குனர் நர்தன் இயக்க இருந்த நிலையில் அவர் விலகிவிடவே, அவருக்குப் பின்னர் அவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கினார்.

பத்து தல படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன நிலையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.  இந்நிலையில் இப்போது இயக்குனர் கிருஷ்ணா பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளாராம். இதற்காக கிருஷ்ணா சொன்ன கதை அஜய் தேவ்கானுக்கு பிடித்துள்ளதாகவும், இப்போது திரைக்கதை வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்