வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' சென்சார் தகவல்கள்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (20:12 IST)
'சென்னை 600028' முதல் பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள அடுத்த படம் 'பார்ட்டி'. முழுக்க முழுக்க கிளாமர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் தயாராகியுள்ள இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வெங்கட்பிரபு படங்களின் ஆஸ்தான நடிகர்களான ஜெய், சிவா ஆகியோர்களுடன் ஷியாம், கயல் சந்திரன் ஆகிய நான்கு ஹீரோக்களும், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ் என மூன்று ஹீரோயின்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மூன்று ஹீரோயின்களும் போட்டி போட்டி கவர்ச்சி காட்டியுள்ளனர் என்பது இந்த படத்தின் சிறப்பு. மேலும் சத்யராஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

'பார்ட்டி' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் திரைப்படங்களுக்கு முன் அதாவது ஜனவரி முதல் வாரத்தில் இந்த படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்