பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் பார்வதி நாயர், சாந்தனு நடிக்கின்றனர். இதில் பார்வதி நாயருக்கு மலையாளிப் பெண் வேடம். தமிழ் பேசுகிற மலையாளிப் பெண்.
இந்தப் படத்தில் பார்வதி நாயர் மோகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பை மகாபலிபுரத்தில் தொடங்கியுள்ளனர். கேரளா, சென்னை மற்றும் வெளிநாட்டில் பிற காட்சிகளை படமாக்க உள்ளனர்.
இப்படத்தில் சத்யா இசையமைக்க, பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். சாந்தனுவின் தந்தை பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் பார்த்திபன். தற்போது தனது குருநாதரின் மகனை தன் படத்தில் நாயகனாக்கி இருக்கிறார்.
பல நடிகைகளை பரிசீலித்து கடைசியில் பார்வதி நாயரின் தமிழ் உச்சரிப்பு பொருந்திப்போக, அவரை பார்த்திபன் தேர்வு செய்துள்ளார்.