இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இசை நிகழ்ச்சி குறித்த ட்விட்டர் பதிவில் அதிலிருந்து ஒரு வரியை நீக்கிவிட்டேன் என நடிகரும் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அந்த ஒரு வரி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்துவதால் நீக்கிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நண்பர்களே வணக்கம்!
நான் பதிவிடுவென யாவும், நான் அறிந்ததும் நான் உணர்வதும். அக்கருத்து அனைவரையும் திருப்திபடுத்தி விட முடியாது.நான் பதிவிட்டதில் முதல் வரி பொதுமக்களின் இன்னல்கள் வருத்தத்திற்குரியது என்பதே.
திரு ARR பணத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்த tweet-ஐ பார்த்த பின்பே இது சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே என் கருத்தை பதிவிட்டேன் அதிலிருந்த ஒரு வரியை பின்னர் நீக்கிவிட்டேன். காரணம் செய்தி தேவையில்லாமல் திசை திரும்புவதால்.
நான் மதிக்கும் ஒருவர் என்னை எவ்வளவு மதிக்கிறார் என்பதை கேள்விபடும் போது மகிழ்வாகத்தானே இருக்கும்.(So நான் பதிவிடுவது எனக்கு சரியெனப் படுவது) அது தவறென சிலருக்கு படுவதால் அதை நீக்கினேன்.மற்றபடி என் வார்த்தைகளும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
பொதுமக்கள் பட்ட சிரமத்தை பணத்தால் ஈடுகட்டி விடமுடியாது ஆனால் பணநஷ்டத்தையாவது ஈடு செய்ய வேண்டும். என்பதே என் விருப்பமும்.திரு ARR
நல்ல மனம் படைத்தவர். தவறுக்கு தானே பொறுப்பு எடுத்துக் கொள்வதாக சொல்லியிருப்பதாலும் தான் அவருடன் துணை நிற்பதாக பதிவிட்டேன்.நல்லது நடக்கட்டும்! நன்றி.