பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு ஏமாற்றம்… தயங்கும் சந்தானத்தின் அடுத்த பட தயாரிப்பாளர்கள்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:33 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது.

நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்.  இப்படம் காமெடி ஜர்னலில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. கானா பாடகராக இந்த படத்தில் சந்தானம் நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணின் இசை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் இன்று ரிலீஸான நிலையில் காலையில் இருந்து படம் பார்த்த ரசிகர்களின் பாஸிட்டிவ் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. சந்தானம் & ஜான்சன் கூட்டணியில் உருவான ஏ1 திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

திரைப்படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், திரையரங்குக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சந்தானத்தின் அடுத்த படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்